பஞ்ச பூதங்கள்

1. ஆகாசம் / இடைவெளி (Space n Time)
  1.  குறை வைக்காமல் தேவையான நேரம் தூங்குவது
  2.  இரவு சரியான நேரத்தில் படுப்பது
  3.  தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே செல் போன லேப்டாப் டி.வி. பார்ப்பதை நிறுத்துவது
  4.  தூங்குவதற்கு முன் கண் மூடி கொண்டு உட்கார்ந்து கொண்டு மூச்சை மட்டும் 33 முழுவதும் கவனிப்பது
  5.  உபவாசம் / பட்டினி அவ்வப்பொழுது இருப்பது ..
  6.  அவ்வப்பொழுது த்யானம் செய்வது ..
  7.  எந்த செயல் செய்யும் பொழுதும் ( உ-ம் சாப்பிடுவது/ நடப்பது ) நடுவில் அவ்வப்பொழுது (உடலுக்கு ஓய்வு தேவைப்படும் போது) கண்களை மூடிக்கொண்டு செயலை நிறுத்துவது , ஓய்வு எடுத்துக் கொள்வது ..
  8.  மனதில் ப்ரச்சினை களையே நினைக்காமல் மன அமைதி கொள்வது....
  9. உடலில் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது
  1.  அடைசலான இடம் மற்றும் உள்ளுக்குள்ளேயே சுழற்சி உள்ள ஏர்கண்டிஷன் தவிர்ப்பது..
  2.  சிறிய அறையில் தாழ்வான கூரையில் உள்ள மின்விசிறிக்கு நேர் கீழே படுப்பதை தவிர்ப்பது...
  3. அவ்வபொழுது திறந்த வெளி (அ) மொட்டை மாடி/ காற்றோட்டமான இடத்தில் இருப்பது..
  4.  மூச்சு வாங்கும் போதெல்லாம் செயலை நிறுத்தி விட்டு கண்ணை மூடிக்கொண்டு நன்றாக மூச்சு விடுவது...
  5.  ஜன்னல் பக்கத்தில் மின்விசிறி வைத்துக் கொள்வது
  6.  அவ்வபொழுது பிராணாயாமம் மற்றும் யோகாசனம் செய்வது..
  1.  ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இல்லாமல் உடல் உழைப்பு செய்வது அல்லது நடப்பது ..
  2.  அவ்வப்போது வெயிலில் இருப்பது.. தேவைப்படும்போது நெருப்பின் முன் அமர்வது
  3.  சமைத்த உணவில் தேவையான அளவு உப்பு சேர்ப்பது....
  4.  தேவையானபோது உடலுக்கு உஷ்ணம் பண்ணும் பொருட்களை - இஞ்சி/ சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் தூள், பெருங்காய பொடி , பிரண்டை, கறிவேப்பிலை , வெல்லம், மிளகாய் முதலிய   உணவில் சேர்த்து எடுத்துக்கொள்வது..
  5.  அவ்வப்போது யோகாஸனம் செய்வது
  1. தேவைப்படும் பொழுது தாமதிக்காமல் தண்ணீர் பருகுவது..
  2.  பச்சை தண்ணீரில் குளிப்பது (ஜுரம் உள்ள போது தவிர ) அல்லது மிக மிக குறைந்த சூட்டில் உள்ள தண்ணீரில் குளிப்பது
  3. தாகம் எடுக்கும்போதும் ,  வெகு  குறைவாக சிறுநீர் கழித்தாலும், கடினமான திட உணவு உண்ட பிறகும், மல கழிவு  நிறைய ஆன பிறகும் வாந்தி எடுப்பதற்கு முன்பும்,  சுத்தமான தண்ணீர் / வெந்நீர் பருகவேண்டும்.
  4. உடல் உஷ்ணமாகி விட்ட போது உப்பு , காரம், புளி, எண்ணெய் மற்றும் உஷ்ணம் பண்ணும் பொருட்களை தவிர்க்க/ குறைக்க வேண்டும்
  5. Piles / இரத்த மூலம் உள்ளவர்கள் காலையில் மலம் கழிக்கும் முன்னர் தண்ணீர் பருகவேண்டும்.
  6. மேலும் தலைவலி மற்றும் வயிற்று வலி வரும்பொழுது வெந்நீர் பருக வேண்டும்...
  7. வெயில் காலத்தில் அவ்வப்பொழுது தலையில் தண்ணீர் சிறிது கொட்டி கொள்ள வேண்டும்.
  8.  உடலில் எங்கு அடிபட்டாலும் உடனே தண்ணீர் சிறிது கொட்டி கொள்ள வேண்டும்
  9. இளநீர் போன்று குளிர்ச்சி தரும் பானங்கள் மற்றும் உணவு (உ-ம் கிருணி பழம் , எலுமிச்சை சாறு கலந்த நீர்/ பச்சையாக வெள்ளரிக்காய் வெண்பூசணி, வெட்டி வேர், மேலும் புடலங்காய் ) உட்கொள்ளுவது
  10. வெயில் காலத்தில் உடல் மிகவும் உஷ்ணமாகி விட்ட போது சிறிது நேரம் ஏர்கண்டிஷன் அறையில் இருப்பது

சுத்தமான , தனக்கு ஜீரணம் ஆகக்கூடிய, பத்தியமான,  Fresh ஆன,  மற்றும் சத்தான உணவை,  தேவையான அளவு முறையாக பக்குவப்படுத்தி,தேவையான நேரத்தில் மட்டும்,  தேவையான அளவு மட்டும், பொறுமையாக கூடியவரை வாயை மூடிக் கொண்டு ரசித்து ருசித்து  சரியான முறையில்  உண்ணுவது முக்கியமாக இரவு உணவு மிகவும் எளிமையானதாக குறைவாக இருக்க வேண்டும்.

பாகுபாடு செய்ய வேண்டிய விஷயங்கள்

இயற்கை ( Natural/Organic)  × செயற்கை ( Chemical mixed)b. நம் நாட்டு உணவு × வெளி நாட்டு உணவு

கபம் (Kapha )   - வாதம் (Vaatam) - பித்தம் (Pittam)   அல்லது முதலில் உஷ்ணம் (  Heating)   × குளிர்ச்சி (Cooling)

குரு (Heavy)  × லகு (Light)

அறு சுவை Balance (இனிப்பு, புளிப்பு, காரம் , உப்பு,  துவர்ப்பு  & கசப்பு) ஸ்நிக்தம் ( Greasy) ×  ருக்ஷம் (Dry)

மலம்  நீக்கும் உணவு    -   நடுத்தரமான உணவு   -   மலச்சிக்கல் செய்யும் உணவு 

 தேவைப்படும் போது உடலின் மேல் தேவையான இடத்தில்   மண் பூச்சு   (அ) எண்ணெய் பூச்சு