உடல் கோளாறுகள்

சளி  / ஜலதோஷம்

மார் சளி நிறைய கட்டி விட்டால் மூக்கிலிருந்து , தொண்டையிலிருந்து சளி, கபத்தை அகற்ற, மேலும் ஜுரம் இருமல் ரிஸ்க் குறைய பின்வரும் முறை மிக மிக பயனுள்ளதாக இருக்கும் ... (உடலில் பெரிய ப்ரச்சினை இல்லாதவர்கள் மட்டும்) வயிற்றின் வெறுமையைப் பொறுத்து சில சொட்டுகள் பால் கலந்த அல்லது திரிபலா சூரணம் சிறிது கலந்த அல்லது கொத்தமல்லி போட்டு லேசாக சுடவைத்த தண்ணீர் 2 - 3 டம்ளர் பருகவும்...

தலையிலும் முகத்திலும் சிறிது தண்ணீர் தெளிக்கவும்..

ஒரு கறிவேப்பிலை குச்சி/ பச்சை தண்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

(அல்லது துண்டு காகிதத்தை அடர்த்தியான 'விளக்கு திரி' அல்லது குச்சியைப் போல உருட்டவும்.)

வாஷ் பேசின் அருகே சென்று இதை மூக்கில் செருகவும்.
நீங்கள் தும்ம (Sneezing) ஆரம்பிப்பீர்கள். மூக்கிலிருந்து சளி கபத்தை அகற்றவும். மார்பில் சிறிது அழுத்தத்தைப் பயன்படுத்தி, இருமவும்..
இருமல் / தும்மலின் போது பிரிக்கப்பட்டிருக்கும் கோழையை வெளியே கொண்டு வாருங்கள். நிறைய முறை காரி உமிழவும்.

மூச்சு சரியாக நடுவில் உட்கார்ந்து ஆஶ்வாசப்படுத்தி கொள்ளவும்

தேவைப்பட்டால் செயல்முறையைச் மீண்டும் செய்யவும் ...

(தீர்த்தத்தில் எதுவும் கலக்காத பட்சத்தில் இருமி , காரி துப்பும் முன்னால் தேவை பட்டால் ஒரு சொட்டு நெய் தொண்டையில் விட்டுக் கொண்டால் தொண்டை புண்ணாகாது )

 சளி இன்னும் நிறைய இருந்தால் இதற்கு பிறகு (தேவைப்பட்டால் மறுபடி வெந்நீர் தீர்த்தம் பருகி விட்டு) வாஷ்பேசின் அருகில் சென்று வாந்தி எடுப்பது போல வலது கையை வாயின் உள்ளே விட்டு நாக்கின் மேல் வைத்து ஓக்காளிக்கவேண்டும்..

வாந்தி வராவிட்டாலும் இந்த ஓக்காளிக்கும்போது கோழை தொண்டையில் இருந்து பிரியும்..
கோழை வெளியே கொண்டு வர நிறைய முறை காரி உமிழவும்.....