- எப்பொழுதும் பொறுமையுடன், மனதில் திருப்தியுடன் (Satisfaction), நேர்மறை எண்ணங்களுடன் (Positive thinking) , தனது ஆரோக்கியத்தில் நம்பிக்கையுடன் (Confidence), மற்றும் கூடிய வரை மகிழ்ச்சியுடன் (Happiness ) இருப்பது
- உடலில் இருந்து கழிவு நீக்கம் - மலம் , மூத்ரம் மட்டுமல்லாமல் சளி, கோழை , வாந்தி, ஆகியவற்றை தாமதிக்காமல் வெளியேற செய்வது .மேலும் நம் உடலே அதை ஆரம்பித்து செய்யும்போது (சில ஆபத்து காலங்கள் தவிர மற்ற சமயங்களில்) அதை நிறுத்த முயற்சிக்காமல், சுலபமாக வெளியேற உடலுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது.. (உ-ம் தண்ணீர் பருகுவது)
- கூடியவரை இயற்கை வாழ்வியல் வாழ்ந்து அதனுடன் தேவையான அளவு த்யானம் , ப்ராணாயாமம், யோகாசனம் செய்வது
- நம் நாட்டு மூலிகைகளை தேவையான அளவுக்கு தேவையான முறைப்படி தவறாமல் பயன்படுத்துவது.. ஆயுர்வேத சாஸ்த்ர ரீதியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை தெரிந்து கொண்டு கூடிய வரை கடைப்பிடிப்பது
- ஆரோக்கியத்திற்கு குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் சுமுகமான மங்களகரமான சூழ்நிலை மிகவும் முக்கியம்
- உடலுக்கு தேவையான பஞ்ச பூதங்களை (ஆகாயம் , காற்று , தீ/ உஷ்ணம், தண்ணீர், உணவு/ப்ருத்வி) தினமும் தேவைப்படும் போது இயற்கையிலிருந்து முழுமையாக கிடைக்க ஒத்துழைப்பது.. மேலும் உடலுக்குள் செல்லும் காற்று, தண்ணீர், உணவு ஆகியவற்றை கூடியவரை கெமிக்கல் கலக்காமல் சுத்தமானதாக இருக்க முயற்சிப்பது
- உடலில் அவ்வப்பொழுது ஏற்படும் கப , வாத , பித்தம் ஆகியவற்றின் சீற்றங்களை ஓரளவுக்கு புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து குறிப்பாக அதற்கேற்ற உணவு உண்ணுவது
- அல்லோபதி மருந்து மாத்திரைகளை கூடியவரை ஆரம்பிக்காமல் இருப்பது
- (அவசர சிகிச்சை மற்றும் ஆரம்பித்து விட்ட பெரிய சிகிச்சை தவிர மற்ற சமயங்களில் ) மேலும் ஏற்கனவே எடுத்துக் கொண்டு இருந்தால் படிப்படியாக குறைக்க முயற்சிப்பது. அறுவை (Surgery) போன்று பெரிய சிகிச்சைகளை செய்ய முடிவு செய்யும் முன் , கூடியவரை யோகாசன , இயற்கை மருத்துவத்தோடு சேர்த்து ஆயுர்வேத/ சித்த மருத்துவ (Naturopathy + Diet + Yogaasana + Ayurveda/ Siddha medicine) முறைகளை தீவிரமாக கடைபிடிக்க முயற்சிப்பது
- தேவைப்படும்போது தற்கால மருத்துவ பரிசோதனைகளை (Diagnosis ) தவிர்க்காமல் வீட்டில் அல்லது அந்த கூடங்களில் பரிசோதனை செய்து கொள்வது.. அதன் பிறகு கூடியவரை யோகாசன , இயற்கை மருத்துவத்தோடு சேர்த்து ஆயுர்வேத/ சித்த மருத்துவ முறைகளை (இரண்டாம் பட்சமாக ஹோமியோபதி) கடைபிடிக்க முயற்சிப்பது. குணமாகாவிட்டால் அல்லோபதி மருத்துவத்தை கடைப்பிடிப்பது
- பெரிய விபத்துக்கள் மற்றும் எமர்ஜென்சி / ஆபத்து காலங்களில் தாமதிக்காமல் தற்கால மருத்துவ முறைகளை ( Emergency/ Trauma Care) மருத்துவமனைகளில் கடைபிடிப்பது (e.g. Oxygen mask, I.V. Drips, Injection of Blood etc.)
- ஆண்கள் கூடியவரை ப்ரம்மசர்யம் கடைப்பிடிப்பது. கூடியவரை விந்து நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது
- சுத்தமான , ஜீரணமாக கூடிய , பத்தியமான, நன்கு பக்குவமான, போஷாக்கான , Fresh ஆன உணவை மட்டும், தேவையான போது மட்டும் மிதமான அளவு மட்டும் உண்ணும் முறைப்படி மௌனமாக கூடியவரை வாயை மூடிக் கொண்டு ரசித்து ருசித்து உண்ணுவது
- உடலில் ப்ராண சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது.. கூடியவரை அதிகமாக்க முயற்சிப்பது
- உடலுக்கு அவ்வப்பொழுது தேவையான அளவு ஓய்வு உறக்கம் உடற்பயிற்சி ஆகியவற்றை தவறாமல் செய்வது